Advertisement |
சிலாபம் - ஆரச்சிக்கட்டுவ, நகுல்எளிய பிரதேசத்தில் தங்கியிருந்த 31 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் இன்றைய தினம்(30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப் படகுகள் மூலமாக இத்தாலி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்குத் தயாராக இருந்துள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் உடப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஆரச்சிக்கட்டுவ பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: