Advertisement |
மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் மேற்பிரிவு, கீழ்பிரிவு, கிங்கோரா, நிலாவத்த ஆகிய தோட்டங்களில் அமைந்துள்ள தற்காலிக குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடுகளில் தாழிறக்கம் மற்றும் வெடிப்புக்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குடியிருப்பு பகுதியில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு நீர் வெளியேறுவதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-format="fluid"
data-ad-layout-key="-gs-i+2h-3b+e"
data-ad-client="ca-pub-1684669680366029"
data-ad-slot="7160983618"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
இந்த நிலையில், 25 குடும்பங்களை சேர்ந்த 110 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து கலாச்சார மண்டபம், சன சமூக நிலையம், சிறுவர் பராமரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர்.
தற்காலிகமாக தங்கியுள்ள மக்களுக்கு, தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக கிராம சேவகரின் மூலம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
0 comments: