Saturday, December 2, 2017

மாணவர்களுக்காக 2445 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடை வவுச்சர்கள்

Advertisement
மாணவர்கள் தாம் விரும்பிய கடைகளிலேயே சீருடைத்துணிகளைக் கொள்வனவு செய்யக்கூடியதாக அனைத்து  மாகாணங்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

42 இலட்சத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்காக 2370 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடை வவுச்சர்களும், பிரிவேனாக்களில் உள்ள மாணவர்களுக்காக 75 மில்லியன் ரூபா பெறுமதியான வவுச்சர்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த வவுச்சர்கள் எதிர்வரும் வாரங்களில் பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த சீருடை வவுச்சர்களின் மொத்த பெறுமதி 2445 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது
Share This
Previous Post
Next Post

comments

0 comments: