Sunday, December 3, 2017

தமிழகத்திலேயே ஜெயலலிதாவுக்கு முதல் சிலை

Advertisement
கோவையில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அண்ணா சிலைக்கு அருகிலேயே புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் திறமைக்கு சவால் படத்தை நிறுத்துங்கள்

கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பல நாள்களாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வ.உ.சி மைதானம் அருகே உள்ள அண்ணா சிலையை செப்பனிடும் பணி நடந்து வந்தது. இரும்பு தகரங்களால் மறைத்து சிலை பரமரிப்பு பணிகள் மேற்கொண்டு வந்ததால் பராமரிப்புப் பணிகள் குறித்து வெளிப்படையாக ஏதும் தெரியவில்லை. முன்னதாக ‘அண்ணா சிலையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சிலையை வைக்கப்போகிறார்கள்’ என்ற வதந்திகள் பரவின. இந்நிலையில், இன்று அதிகாலை சிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்களெல்லாம் அகற்றப்பட்டன. பொதுமக்களுக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்கக்கூடிய வகையில் அண்ணாவுக்கு அடுத்து எம்.ஜி.ஆர்-க்கும் அதற்கு அடுத்ததாக ஜெயலலிதாவுக்கும் சிலை என மூன்று தலைவர்களுக்கும் வரிசையாக சிலை அமைக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தியதற்கு கோவை மிகமுக்கிய காரணம். ஆகையால் இங்குதான் முதன்முதலில் ஜெயலலிதாவுக்கு சிலையை திறக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி விரும்பியதாகக் கூறப்ப்டுகிறது. தமிழ்நாட்டிலேயே ஜெயலலிதாவுக்கு திறக்கப்படும் முதல் சிலை, மூன்று முன்னாள் முதல்வர்களுக்கு ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிலை ஆகியப் பெருமைகளை தனதாக்கிக்கொண்டிருக்கிறது இந்த சிலை.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: