Friday, December 1, 2017

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Advertisement


எழுதுகருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்குப் பின்னர் செல்லுபடியாகாது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இவ்வாறான நாணயத் தாள்கள் டிசெம்பர் 31ஆம் நாளின் பின்னர் வங்கிகளினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், அவை பெறுமதியற்றவையாகி விடும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், நாணயத்தாள்களின் மீது எழுதுதல், வரைதல், முத்திரையிடல், வெட்டுதல் அல்லது சேதப்படுத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: