Advertisement |
2020ம் ஆண்டில் இலங்கையின் ஆட்சி அதிகாரம் யார் கையில் இருக்கும் என்பது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக ஊடகப் பிரிவு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதியாக நாட்டை நேசிக்கின்ற, படித்த, ஏகாதிபத்திய இராணுவ ஆட்சி அமைப்பை கொண்ட தலைவரே பொருத்தமானவர் என்று ஆய்வின் பெறுபேறுகள் வெளியாகி உள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக ஊடகப் பிரிவு ஆய்வின் பெறுபேறுகளின்படி,
2020 ஆம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வருவதற்கு 38.18 சதவீதமானவர்களின் விருப்பைப் பெற்றுள்ளார்.
அடுத்த இடத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சஜித் பிரேமதாச 28.64 சதவீத விருப்பை பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க அதிகளவான மக்களின் விருப்பை பெற்றுள்ளார்.
தேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு 9.18 சதவீதமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 8.64 சதவீத விருப்பும் கிடைத்துள்ளது.
நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்த 18-75 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: