Advertisement |
இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
பொதுவாக உடற்பயிற்சியை செய்யும் போது, அடிக்கடி சிறிது நீரைப் பருகலாம்.
ஆனால் உடற்பயிற்சி செய்து முடித்த பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் உடற்பயிற்சியால் பாதிக்கப்பட்ட தசைகள் சரியாவதோடு, உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, தசைகளும் நன்கு வளர்ச்சி பெறும்.
சிலர் உடற்பயிற்சி செய்து முடித்த பின் எனர்ஜி பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் என்று வாங்கிப் பருகுவார்கள்.
ஸ்போர்ட்ஸ் பானங்கள்
மார்கெட்டுகளில் ஸ்போர்ட்ஸ் பானங்கள் உடற்பயிற்சிக்கு பின் குடிக்க ஏற்ற பானமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை நம்பிக் கொண்டு பலரும் உடற்பயிற்சிக்குப் பின் இந்த பானங்களைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த பானங்களில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் ஏதும் இல்லாமலும் உள்ளது. வேண்டுமானால் சில பிராண்டுகளில் சில வைட்டமின்களும், எலக்ட்ரோலைட்டுகளும் இருந்தாலும், அதிகளவு சர்க்கரை மற்றும் செயற்கை ப்ளேவர்கள் இருப்பதால், இம்மாதிரியான பானங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
மது
மாலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின், இரவில் ஒரு டம்ளர் ஒயின் குடிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். பொதுவாக மது பானங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.இதை உடற்பயிற்சிக்கு பின் குடித்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதற்கு பதிலாக, வறட்சியை உண்டாக்கும்.
மேலும், மது பானங்களில் வெற்று கலோரிகள் அதிகமாகவும், எவ்வித ஊட்டச்சத்துக்களும் இல்லை.
இப்படி வெற்று கலோரிகள் நிறைந்த பானங்களைக் குடித்தால், அது உடலில் கொழுப்புக்களின் அளவைத் தான் அதிகரிக்கும்.
டப்பாவில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்
டப்பாவில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் ஆரோக்கியமானது போன்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படி டப்பாவில் விற்கப்படும் பழச்சாறுகள் நற்பதமான பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது அல்ல.முழுமையாக செயற்கை ப்ளேவர்களைக் கொண்டது. இத்தகைய கெமில்லல் கலந்த பானங்களை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பது நல்லதல்ல. சொல்லப்போனால் இந்த பானங்களில் சுக்ரோஸ் கார்ன் சிரப் தான் அதிகம் உள்ளது. இவை உடல் பருமனை உண்டாக்கி, மெட்டபாலிச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
காபி
உடற்பயிற்சிக்கு பின் பலருக்கு ஒரு கப் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் இப்படி குடித்தால், ஏற்கனவே உடற்பயிற்சியின் போது வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த இதயம், காபி குடித்த பின் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும்.இதற்கு அதில் உள்ள காப்ஃபைன் தான் காரணம். உடற்பயிற்சிக்குப் பின் காபி குடித்தால், அது இதய படபடப்பை உண்டாக்குவதோடு, தூக்க பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேலும் காபி உடல் வறட்சியையும் ஏற்படுத்தும்.
உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!
இயற்கை பானம்
சுவைமிக்க நீரை வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். அதற்கு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாகவே நறுக்கி, ஒரு பெரிய ஜாடியில் போட்டு, நீரை நிரப்பி, பல மணிநேரம் ஊற வையுங்கள். பின் அந்த நீரை வடிகட்டி வேண்டிய நேரம் குடித்து மகிழுங்கள்.சால்லேட் மில்க்
மற்றொரு சுவையான பானம் சாக்லேட் மில்க். அதிலும் வீட்டிலேயே சாக்லேட் மில்க்கை தயாரித்து குடிப்பது நல்லது. இந்த பானத்தில் சாதாரண பாலை விட இரண்டு மடங்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது.இது உடற்பயிற்சிக்குப் பின் குடிக்க ஏற்ற பானங்களுள் ஒன்றாகும்.
செர்ரிப் பழ ஜூஸ்
செர்ரிப் பழ ஜூஸ் உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற அற்புதமான பானங்களுள் ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்.மேலும் இந்த ஜூஸ் உடலினுள் ஏற்பட்ட காயங்களைக் குறைத்து, தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்து புத்துயிர் பெறச் செய்யும்.
0 comments: