Advertisement |
தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளார்.
அவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் நிலைய அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை - பெஸ்தியன் மாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு கஞ்சாவுடன் 17 வயதான குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
எவ்வாறாயினும் இவர் சிறைக்கூடத்தில் தனது ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
ஹப்புத்தளே கிரிமானகம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்ததுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விஷேட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணைகளுக்கு அமைவாக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
0 comments: