Advertisement |
சிலருக்காகவன்றி பொது நல்லைனை முன்னிட்டு சழரிய தீர்மானத்தை எடுப்பது எனது பொறுப்பு என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் கூறினார்கள். எல்லோரையும் ஆறுதல்படுத்துவதற்காக ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுப்பது கல்விக் கொள்கை அல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர் கல்வித் துறையின் மேன்மையின் பொருட்டு அச்சமின்றி முடிவெடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.
கொழும்பு தேலி பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிய சிறுவர் சித்திரப் போட்டியில் பெற்ற பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு கல்வி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட தேசிய பாடசாலைகள் ஆசிரிய இடமாற்ற பற்றிய வேலைத் திட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கமளித்தார்.
தொழிற் சங்கங்கள் ஆசிரிய சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்று பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்த ஆசிரியர் இடமாற்ற வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தான் தலைமைத்துவம் வழங்கியதாக விபரித்த கல்வி அமைச்சர், கொள்ளையை செயற்படுத்துவதன் பொருட்டு பயமின்றிச் செயல்படுவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் சில ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்களைத் தூண்டிவிட்டு இடமாற்றத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சுட்டிக் காட்டிய கல்வி அமைச்சர் அவ்வாறான ஆசிரியர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் கடும் ஒழுஞகாற்று டவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமையைப் பெற்றுக்கொடுப்பது போன்று ஆசிரியர்களுக்கு உண்ணாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்கி மனித வளத்தை வலுப்படுத்துதல் உட்பட்ட நோக்கங்களுக்காக எப்போதும் ஆயத்தமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இனிமேல் நடைமுறையில் இருக்கும் கொள்கைக்கு அமைய ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆசிரிய இடமாற்ற பொறிமுறையை வகுப்பதாகக் குறிப்பிட்டார்.
0 comments: