Advertisement |
தற்கொலை நிகழ்வுகளை தடுக்க பேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழ்கிறது. இதனை நல்லவைகளுக்கு மட்டும் அல்லாது, தீயவற்றிற்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் முக்கியத்துவம் பெறுவது தற்கொலை குறித்த எண்ணங்கள். பேஸ்புக் லைவில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தி, உலகத்தின் முன்பாகவே உயிரை விட்டு விடுகின்றனர்.
இது தவறான முன்னுதாராணமாக அமைந்து விடுகிறது.
இதனைத் தடுக்க பேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. உலக தற்கொலை தினமான செப்டம்பர் 10ஆம் தேதி, இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்காக பேடெர்ன் எனப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது, பேஸ்புக் பதிவில் காணப்படும் பிரச்சனைகள், உதவி கோரும் வார்த்தைகள் ஆகியவற்றை கண்டறிந்து விடும்.
அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளிப்பதோடு, அவ்வாறு மனச்சோர்வில் இருந்து நீங்க வழிவகை செய்யும் நபர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி விடுகிறது
0 comments: