Saturday, December 2, 2017

பெருக்கெடுத்தது நில்வளா - மூழ்கியது அக்குறஸ்ஸ

Advertisement
நில்வளா கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக அக்குரெஸ்ஸ நகரின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அக்குரெஸ்ஸ, பிட்டபெத்த வீதியின் பாணதும பிரதேசம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தெஹிகஸ்பே, வெலிஹேன, மாகந்தரு, தலஹாகம, போரதொட்ட, கொடப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்குரெஸ்ஸ, கம்புறுப்பிட்டி வீதியின் ஹோன்துகொட பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால், வில்பிட்ட, லேனபட்டுவ, கம்புறுப்பிட்டிய, ஹக்மன ஆகிய பிரதேசங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

Share This
Previous Post
Next Post

comments

0 comments: