Friday, December 1, 2017

புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கத்தை மீட்க அதிரடிப்படையினர் நடவடிக்கை

Advertisement


விடுதலைப் புலிகளின் சிவில் நிர்வாகத்தினர் வலைஞர்மடம் பகுதியில் தங்க நகை புதைத்து வைத்துள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் அப்பகுதி ஆலமரம் ஒன்றின் கீழ் நேற்று அகழ்வு பணி ஒன்றை தொடர்ந்தனர்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் தொடரப்பட்ட இந்த நடவடிக்கையினை பொலிஸார் அதிரடிப்படையினர் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இரண்டு கனரக வாகனத்தின் உதவியுடன் தொடரப்பட்ட இந்த மண் அகழ்வு நடவடிக்கை நேற்று இரவிலும் தொடரப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த பகுதியில் இருந்து தங்கப்புதையல் எதுவும் மீட்கப்படவில்லை என்று முல்லைத்தீவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: