Advertisement |
கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நபர். கொடக்கவெல - பள்ளேபெத்த, தம்பேதென்ன பிரதேசத்தில் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கறுவா பட்டைகளை நைப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் நேற்றிரவு இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
அஹூங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் தலை, கால்கள் மற்றும் கைகள் வெட்டி துண்டாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைகள் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
கொலை செய்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபரை கைது செய்ய கொடக்கவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: