Advertisement |
நிகவரெடிய பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய பொல்பிலிதிகம பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தங்கள் வீட்டில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க மாலையில் தந்தத்தின் மூலம் பாகங்களை செய்துள்ளமை அறியவந்துள்ளது.
32 வயது மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் மகுல்பொன கிராம உத்தியோகஸ்தராக கடமையாற்றிவருவதுடன், மற்றைய நபர் தொரவேருவ கிராம உத்தியோகஸ்தராக சேவையாற்றி வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
0 comments: