மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
மிதுனம்
மிதுனம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உடன் பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கடகம்
கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பணம் வரும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.
சிம்மம்
சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
கன்னி
கன்னி: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படு வதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழி யில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுதுதான் உணருவீர் கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
தனுசு
தனுசு: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மகரம்
மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கும்பம்
கும்பம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். ஓரளவு பணவரவு உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மீனம்
மீனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
0 comments: