Advertisement |
சிவனொளிபாதமலை பருவகாலம், பூரணை தினம்(03) நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமானது.
பருவகாலத்தை ஆரம்பிக்கும் முகமாக, இரத்தினபுரி, பெல்மதுளை கல்பொத்தாவல ரஜமகா விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமன் தேவ விக்கிரமும் பூஜைப் பொருட்களும் தாங்கிய இரதபவனி, மலையடிவாரத்தை நேற்று மாலை வந்தடைந்தது.
அவிசாவளை, கினிகத்தேனை, ஹட்டன், நோர்வூட் மற்றும் மஸ்கெலியா வழியாக நல்லத்தண்ணி, சிவனொளிபாதமாலை அடிவாரத்தைச்
சென்றடைந்தது.
இதேவேளை, புனிதப் பொருள் தாங்கிய இரதபவனி, பலாங்கொடை- பொகவந்தலாவை வழியாவும் வருகைதந்தது.
முடிந்தால் நிறுத்துங்கள்
இரதபவனியையொட்டி, பிரதான வழிகளில் மூவின மக்களும் வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்துடன், தானங்களும் வழங்கினர்.
சிவனொளிபாத மலைக்கு வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் இம்முறையும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புனித பூமியின் புனிதத்தை காக்குமாறு, யாத்திரிர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments: