Advertisement |
இலங்கையில் அசாதாரண வானிலையை ஏற்படுத்திய தாழமுக்க நிலை இலங்கை வான்பரப்பை விட்டு நகர்ந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக இன்றைய தினம் மழை வீழ்ச்சி குறைந்து இயல்பு நிலை திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
எனினும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடி மழையும், வடக்கு, வடமத்தி, மத்தி, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மேல் மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய பிரதேசங்களிலும் 75 மில்லி மீட்டர் வரையான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே நாட்டின் கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று காரணமாக அலைகள் ஆக்ரோசமாக காணப்படக் கூடும் என்பதால் கடற்தொழிலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளல் நன்று என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments: