Advertisement |
சட்டவிரோதமாக டுபாயிலிருந்து தங்க நகைகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று(12) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 34 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
3 கோடியே 20 இலட்சம் பெறுமதியான குறித்த தங்க நகைகள் 5.07 கிலோ நிறையுடையது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொக்கலட்டுகள் கொண்டு வரப்பட்ட பையில் மிகவும் சூட்சுமமாக மறைத்து குறித்த தங்க நகைகள் கொண்டு வரப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments: