Tuesday, February 13, 2018

இந்தியாவில் WhatsApp மூலம் இனி பண பரிமாற்றமும் சாட்டின் போன்று ஈசி!

Advertisement
வாட்ஸ் அப் செயலி மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.



வாட்ஸ் அப் மூலம் பணப்பரிமாற்றத்தை Unified Payments Interface (யூ.பி.ஐ) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, வங்கிகளுடன் இணைந்து பல்வேறு கட்டங்களில் யூ.பி.ஐ சார்ந்த வழிமுறையை செயல்படுத்தி வாட்ஸ் அப் பணியாற்றும். இந்தியாவில் Unified Payments Interface மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்படும் வசதி கடந்த சில மாதங்களாக அதிக அளவில் நடைமுறையில் உள்ளது. 
யூ.பி.ஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்வது மிக எளிதாகவும் உள்ளது. இதற்கு மற்றவர்களுடைய அக்கவுன்ட் நம்பர் தேவையில்லை, அவர்களுடைய மொபைல் நம்பர் இருந்தால் போதும். ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.
இதனை தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் பல வங்கிகளுடன் வாட்ஸ் அப் நிறுவனம் இணைந்து பணப் பரிமாற்றம் வசதியின் மூலமாக தனது சேவையை வழங்கும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில இந்த வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதமே, மத்திய அரசின் அனுமதியை பெற்றது. 
உங்கள் வாட்ஸ் அப் அப்டேட் செய்து, வாட்ஸ் அப் ஆப்ஷனுக்குள் செட்டிங்ஸ் சென்றால் payments என்ற புது ஆப்ஷன் இருக்கும். இதன்மூலம் உங்களது வாட்ஸ் அப்பில் இருக்கும் நம்பர் எளிதில் பணம் பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். 
Share This
Previous Post
Next Post

comments

0 comments: