Thursday, February 22, 2018

நீங்களும் பணக்கார ராசியைச் சேர்ந்தவரா??

Advertisement
இவ்வுலகில் யாருக்கு தான் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்காது. நிச்சயம் அனைவருக்குமே இருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு தான் பணத்தை வைத்திருந்தாலும், இன்னும் அதிகமாக சம்பாதிக்கவே விரும்புவர். கடின உழைப்பும், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதும் ஒருவரை சிறந்த வழியில் பணத்தை ஈட்டச் செய்யும். அதே சமயம் ஒருவரது ராசிக்கும், செல்வத்தை ஈட்டுவதற்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரியுமா?
ஆம், சிலர் கடுமையாக உழைக்கமாட்டார்கள். ஆனால் சிறிது முயற்சித்தாலே பணக்காரர் ஆகிவிடுவர். ஆனால் வேறு சில எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்நிலையை அடைய முடியாமல் இருப்பர். இவை அனைத்திற்கும் ஒருவரது ராசியும் ஓர் காரணம் என ஜோதிடம் கூறுகிறது.
உங்களுக்கு எந்த ராசிக்கார்களுக்கு பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட மக்கள் மற்றவர்களை விட மிகவும் விரைவில் பணத்தை சம்பாதிப்பார்கள். இங்கு அப்படி விரைவில் பணத்தை சம்பாதிக்கும் சில ராசிக்காரர்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் அந்த ராசிக்கார்களுள் ஒருவராக இருக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கார்கள் பிடிவாத தன்மைக் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் பொறுமைசாலி மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்கள் எதிலும் அதிக கவனத்தை செலுத்துவார்கள் மற்றும் மற்றவர்களால் முடியாத காரியத்தைக் கூட இவர்களால் முடிக்க முடியும். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் தங்களது உழைப்பால் தான் பணத்தை ஈட்ட விரும்புவார்கள். இவர்கள் தேவையில்லாத செலவுகளை செய்பவர்களாக இருப்பர். ஏனெனில் இவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவார்கள்.
மேலும் இவர்கள் இயற்கையாகவே தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு எப்போதும் ஸ்பெஷலான பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்துவார்கள். என்ன தான் தேவையில்லாத செலவுகளை செய்பவராக இருந்தாலும், இந்த ராசிக்காரர்களிடம் சேமிப்பு எப்போதுமே இருக்கும். இந்த ஒரு பழக்கமே இவர்களை செல்வந்தராக்குகிறது என்பதை மறக்காதீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் மீது மிகவும் அன்பானவர்கள் மற்றும் அக்கறை கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடிய அளவு தாராள மனப்பான்மை கொண்டவர்கள். குடும்பத்திற்கு அடுத்தப்படியாக இவர்களது முன்னுரிமை நிதி பாதுகாப்பு ஆகும். இவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதில் சிறந்தவர்கள்.
மேலும் இவர்கள் எப்போதும் தங்களது நிதி நிலைமை மற்றும் முடிவெடுக்கும் போது மற்றவர்களுடன் கலந்தாலோசிக்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது நிதி பாதுகாப்பிற்காக இளமையிலேயே சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் வீணாக எந்த ஒரு செலவையும் செய்யமாட்டார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே பணத்தை தாராளமாக செலவழிப்பார்கள்.

சிம்மம்
நிதி அம்சத்தைக் கொண்ட ராசிக்காரர்களுள் சிறப்பானவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது நிதியுதவி முழுவதையும் நிர்வகிக்க ஒரு வினோதமான திறனைக் கொண்டுள்ளனர். இவர்கள் எப்போதும் சிறப்பான தீர்ப்பை வழங்குபவர்களாக இருப்பர் மற்றும் இவர்களது சேமிப்பு, செலவு மற்றும் பேரம் பேசுதல் போன்ற அனைத்துமே சிறப்பானதாக இருக்கும்.
மேலும் இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள் மற்றும் எதிலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தைரியமானவர்கள். எனவே இவர்கள் ரிஸ்க் எடுக்க எப்போதும் அஞ்சமாட்டார்கள். இவர்களது கற்பனைவளம் மற்றும் இலட்சிய இயல்பு, இவர்களை ஒரு நல்ல தலைவராக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சிறந்த மேலாளர்கள். இவர்கள் தங்களது நிதி நிலைமையை சிறப்பாக நிர்வகிப்பார்கள். இவர்களது அமைதியான குணத்தால், எந்த ஒரு சிக்கலான சூழ்நிலைகளிலும் நல்ல தீர்வைக் காண்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் கொடுக்கல்-வாங்கல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதால், இவர்கள் மிகச்சிறந்த தீர்மானங்களை எடுப்பவர்களாக இருப்பர்.
மேலும் இவர்கள் மிகவும் சிக்கனக்காரர்கள். இதனால் இவர்கள் நிதியை சிறப்பாக சேமிப்பவர்களாக இருப்பர். ஆனால் இவர்களுக்கு உணவு என்றால் கொள்ளைப் பிரியம். எனவே இவர்கள் மற்றவர்களுக்கு விருந்து அளிக்க செலவு செய்ய யோசிக்கமாட்டார்கள். முக்கியமாக கன்னி ராசிக்காரர்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பானதாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பர். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் பணம் பணம் என்று இருப்பர். ஆனால் இவர்களிடம் சேமிப்பு என்பது இருக்காது. இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்கு போடும் திட்டங்களால், அதிகம் சம்பாதிக்க முடியும்.
மேலும் இவர்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் எடுக்கும் முடிவு எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களது பேரார்வம் மற்றும் போட்டியால் தான், இவர்கள் இருக்கும் துறைகளில் வெற்றியை எட்டுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மஞ்சள் நிற ஜஸ்பர் கல் சிறந்த அதிர்ஷ்டத்தை வழங்கும்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: