Advertisement |
கனா கானும் காலங்கள் மூலம் பிரபலமானவர் யுதன் பாலாஜி. அதன் பிறகு அவர் நடித்த பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களும் மிக பிரபலம்.
தற்போது அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதுவும் காதலர் தினமான நேற்றுதான் கோர்ட்டில் அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து கொடுத்துள்ளனர்.
இந்த தகவலை யுதன் பாலாஜி தன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணம் நடந்து இரண்டு வருடமே ஆன நிலையில் இப்படி இருவரும் பிரிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
0 comments: