Thursday, February 15, 2018

ஐதேக வில் மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்

Advertisement
கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். 


அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் கூறினார். 

இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தயார் என்று பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ளார். 

இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி கிடைக்கும் என்று தான் நம்புவதாக காலி பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் பேசிய பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறினார்.
Share This
Previous Post
Next Post

comments

0 comments: