Advertisement |
தனது பதவியில் தொடர்ந்தும் நீடிக்க ஜனாதிபதி வாய்ப்பு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளாமல் தொடர்ந்து அரசாங்கத்தை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது ரணில் இந்தத் தகவலை வெளியிட்டதாக அந்தக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை சபாநாயகர் சமரசப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசாங்கம் மற்றும் கட்சியை மீள்திருத்தம் செய்யும் நடவடிக்கை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் அழுத்தமாக குறிப்பிட்டதாக, குறித்த உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: