Thursday, February 22, 2018

நீங்களும் பணக்கார ராசியைச் சேர்ந்தவரா??

நீங்களும் பணக்கார ராசியைச் சேர்ந்தவரா??
இவ்வுலகில் யாருக்கு தான் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்காது. நிச்சயம் அனைவருக்குமே இருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு தான் பணத்தை வைத்திருந்தாலும், இன்னும் அதிகமாக சம்பாதிக்கவே விரும்புவர். கடின உழைப்பும், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதும் ஒருவரை சிறந்த வழியில் பணத்தை ஈட்டச் செய்யும். அதே சமயம் ஒருவரது ராசிக்கும், செல்வத்தை ஈட்டுவதற்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரியுமா?
ஆம், சிலர் கடுமையாக உழைக்கமாட்டார்கள். ஆனால் சிறிது முயற்சித்தாலே பணக்காரர் ஆகிவிடுவர். ஆனால் வேறு சில எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்நிலையை அடைய முடியாமல் இருப்பர். இவை அனைத்திற்கும் ஒருவரது ராசியும் ஓர் காரணம் என ஜோதிடம் கூறுகிறது.
உங்களுக்கு எந்த ராசிக்கார்களுக்கு பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட மக்கள் மற்றவர்களை விட மிகவும் விரைவில் பணத்தை சம்பாதிப்பார்கள். இங்கு அப்படி விரைவில் பணத்தை சம்பாதிக்கும் சில ராசிக்காரர்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் அந்த ராசிக்கார்களுள் ஒருவராக இருக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கார்கள் பிடிவாத தன்மைக் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் பொறுமைசாலி மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்கள் எதிலும் அதிக கவனத்தை செலுத்துவார்கள் மற்றும் மற்றவர்களால் முடியாத காரியத்தைக் கூட இவர்களால் முடிக்க முடியும். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் தங்களது உழைப்பால் தான் பணத்தை ஈட்ட விரும்புவார்கள். இவர்கள் தேவையில்லாத செலவுகளை செய்பவர்களாக இருப்பர். ஏனெனில் இவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவார்கள்.
மேலும் இவர்கள் இயற்கையாகவே தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு எப்போதும் ஸ்பெஷலான பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்துவார்கள். என்ன தான் தேவையில்லாத செலவுகளை செய்பவராக இருந்தாலும், இந்த ராசிக்காரர்களிடம் சேமிப்பு எப்போதுமே இருக்கும். இந்த ஒரு பழக்கமே இவர்களை செல்வந்தராக்குகிறது என்பதை மறக்காதீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் மீது மிகவும் அன்பானவர்கள் மற்றும் அக்கறை கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடிய அளவு தாராள மனப்பான்மை கொண்டவர்கள். குடும்பத்திற்கு அடுத்தப்படியாக இவர்களது முன்னுரிமை நிதி பாதுகாப்பு ஆகும். இவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதில் சிறந்தவர்கள்.
மேலும் இவர்கள் எப்போதும் தங்களது நிதி நிலைமை மற்றும் முடிவெடுக்கும் போது மற்றவர்களுடன் கலந்தாலோசிக்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது நிதி பாதுகாப்பிற்காக இளமையிலேயே சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் வீணாக எந்த ஒரு செலவையும் செய்யமாட்டார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே பணத்தை தாராளமாக செலவழிப்பார்கள்.

சிம்மம்
நிதி அம்சத்தைக் கொண்ட ராசிக்காரர்களுள் சிறப்பானவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது நிதியுதவி முழுவதையும் நிர்வகிக்க ஒரு வினோதமான திறனைக் கொண்டுள்ளனர். இவர்கள் எப்போதும் சிறப்பான தீர்ப்பை வழங்குபவர்களாக இருப்பர் மற்றும் இவர்களது சேமிப்பு, செலவு மற்றும் பேரம் பேசுதல் போன்ற அனைத்துமே சிறப்பானதாக இருக்கும்.
மேலும் இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள் மற்றும் எதிலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தைரியமானவர்கள். எனவே இவர்கள் ரிஸ்க் எடுக்க எப்போதும் அஞ்சமாட்டார்கள். இவர்களது கற்பனைவளம் மற்றும் இலட்சிய இயல்பு, இவர்களை ஒரு நல்ல தலைவராக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சிறந்த மேலாளர்கள். இவர்கள் தங்களது நிதி நிலைமையை சிறப்பாக நிர்வகிப்பார்கள். இவர்களது அமைதியான குணத்தால், எந்த ஒரு சிக்கலான சூழ்நிலைகளிலும் நல்ல தீர்வைக் காண்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் கொடுக்கல்-வாங்கல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதால், இவர்கள் மிகச்சிறந்த தீர்மானங்களை எடுப்பவர்களாக இருப்பர்.
மேலும் இவர்கள் மிகவும் சிக்கனக்காரர்கள். இதனால் இவர்கள் நிதியை சிறப்பாக சேமிப்பவர்களாக இருப்பர். ஆனால் இவர்களுக்கு உணவு என்றால் கொள்ளைப் பிரியம். எனவே இவர்கள் மற்றவர்களுக்கு விருந்து அளிக்க செலவு செய்ய யோசிக்கமாட்டார்கள். முக்கியமாக கன்னி ராசிக்காரர்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பானதாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பர். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் பணம் பணம் என்று இருப்பர். ஆனால் இவர்களிடம் சேமிப்பு என்பது இருக்காது. இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்கு போடும் திட்டங்களால், அதிகம் சம்பாதிக்க முடியும்.
மேலும் இவர்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் எடுக்கும் முடிவு எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களது பேரார்வம் மற்றும் போட்டியால் தான், இவர்கள் இருக்கும் துறைகளில் வெற்றியை எட்டுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மஞ்சள் நிற ஜஸ்பர் கல் சிறந்த அதிர்ஷ்டத்தை வழங்கும்.

Tuesday, February 20, 2018

சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் - லொள்ளுசபா மனோகர் அதிரடி

சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் - லொள்ளுசபா மனோகர் அதிரடி
சினிமாவில் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகிறது.
அந்தவகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மனோகரும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சினிமாவுல இருக்கிறவங்களையே மதிக்காத ரஜினி அரசியலுக்கு வந்து ஓட்டுப்போட்ட மக்களை எங்க கண்டுகொள்ள போகிறார் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீது சுவிஸ் வழக்கறிஞர்கள் கடுமையான நிலைப்பாடு

விடுதலைப் புலிகள் மீது சுவிஸ் வழக்கறிஞர்கள் கடுமையான நிலைப்பாடு
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் இயக்கமானது குற்றவாளிகளின் இயக்கமென்று சுவிட்சர்லாந்தின் முதன்மை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் குறித்த கருத்தை வழக்கறிஞர் Juliette Noto தெரிவித்துள்ளார்.
குற்றப்பின்னணி கொண்ட ஒரு அமைப்புக்கு இருக்க வேண்டிய அனைத்தும் அம்சங்களும் விடுதலைப் புலிகள் அமைக்கும் இருப்பதாக அவர் கருதுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சட்டத்திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வந்ததாக கூறும் Juliette Noto,
அந்த இயக்கத்தின் உண்மையான நோக்கத்தை குற்றவியல் நடவடிக்கைகளால் எதிர்கொண்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இருக்கும் அதே பார்வையை தாம் சுவிட்சர்லாந்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பொருத்திப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் அவர்களது செயல்பாடுகளில் மிகவும் ஈடுபாட்டுடன் இயங்குவதாகவும்,
ஆனால் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்கள் அதன் கருத்தியலில் முழு ஈடுபாட்டுடன் இயங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர் நிறுத்த காலகட்டங்களில், குறிப்பாக 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் 2005 வரை விடுதலைப்புலிகள் இயக்கமானது தங்கள் அரசியல் எதிரிகளை படுகொலை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, திருகோணமலை பகுதியில் இஸ்லாமிய இனத்தை நிர்மூலம் செய்ததையும், அதே காலகட்டத்தில் 2 அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் Noto சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த வழக்கறிஞர் Noto,
பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் இயக்கமே கலவரத்தையும் போரையும் ஊக்குவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனிவா ஒப்பந்தத்தை ஒருக்காலும் மதிக்காத விடுதலிப்புலிகள் இயக்கம் எப்போதுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளது என்றார்.
தற்போது வழக்கை எதிர்கொள்ளும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 13 பேரும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர்கள்.
ஆதலால், உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு சுவிட்சர்லாந்தில் சேகரித்த நிதி மொத்தமும் விடுதலைப்புலிகள் அமைப்புக்காகவே என வழக்கறிஞர் Juliette Noto திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி http://m.20min.ch

Monday, February 19, 2018

கனேடிய பிரதமருக்கு இந்தியாவில் நேர்ந்த அவமானம்!

கனேடிய பிரதமருக்கு இந்தியாவில் நேர்ந்த அவமானம்!
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் அவ்வளவு ஒன்றும் உவப்பானதாக இல்லை
.
தாஜ் மஹால் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது குடும்பத்தினர் சென்றபோது இந்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலராலும் அவர் புறக்கணிப்புக்கு உள்ளானார்.

அவர் டெல்லி வந்து சேர்ந்தபோது கீழ்நிலையில் உள்ள அமைச்சரான வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றது அவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதி பல தருணங்களில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சென்று வரவேற்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். தனது வெளிநாட்டு சகாக்களை அவர் கட்டியணைத்து வரவேற்கவும் செய்வார்.

மிகச் சமீபமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் நேரில் சென்று, விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார்.

ஆனால், கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து இரண்டு நாட்கள் ஆகியும் மோதி அவரை இன்னும் நேரில் சந்திக்கக் கூட இல்லை. திங்களன்று பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரூடோ சென்றபோது, அங்கும் பிரதமர் மோதி செல்லவில்லை.

பிரதமர் மட்டுமல்ல, ஞாயிறன்று ட்ரூடோ தாஜ் மஹால் சென்றபோது, அந்த உலகப் பாரம்பரிய சின்னம் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவரைச் சந்திக்கவில்லை.

ஒரு கீழ்நிலையுள்ள அமைச்சரை ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்க அனுப்பிவைத்தது நிச்சயமாக அவரை அவமதிக்கும் செயல் என்று பிபிசியிடம் கூறினார் பொருளாதார வல்லுனரும், பத்தி எழுத்தாளருமான விவேக் தெஹேஜியா.

"இந்திய மாநிலமான பஞ்சாபை தனியாகப் பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடு அமைக்கக் கோரும் காலிஸ்தான் இயக்கத்துடன் ட்ரூடோவின் அரசில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்புடன் இருப்பதே காரணம்,"என்று அவர் கூறுகிறார்.

கனடாவில் வாழும் சீக்கியர்கள் ட்ரூடோவின் தாராளவாதக் கட்சிக்கு பெரும் வாக்கு வங்கியாக உள்ளனர். சில அமைச்சர்கள் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடம் நெருக்கமானவர்களாக உள்ளனர்.

கடந்த 1985இல் 329 பேர் கொல்லப்பட்ட கனடாவில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனட அதிகாரிகள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு சீக்கியர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

'காலிஸ்தான் ஆதரவாளர்' என்று காரணம் கூறி, ஏப்ரல் 2016-இல் இந்தியா வந்த கனடா பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன்-ஐ பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் சந்திக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா பிரதமர் இந்தியா வந்தபோது அவமானப்படுத்தப்படவில்லை என்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் கனடாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

"மத்திய அமைச்சரவையின் ஓர் உறுப்பினர் அவரை வரவேற்க வேண்டும் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு தலைவர்களை மோதி நேரில் சென்று வரவேற்றார் என்பதற்காக எல்லோரையும் அவ்வாறே வரவேற்க முடியாது," என்கிறார் அவர்.

"காலிஸ்தான் குறித்த இந்தியாவின் கவலைகளை கனடாவின் உயர் நிலையில் இருப்பவர்களிடம் எழுப்பாமல், ட்ரூடோவின் வருகையை, காலிஸ்தான் குறித்த கனடாவின் நிலைப்பாடு குறித்து முன்முடிவுடன் அணுகக்கூடாது," என்று பிபிசியிடம் தெரிவித்தார் முன்னாள் வெளியுறவு அதிகாரி கன்வல் சிபல்.

"உள்நாட்டு அரசியல் காரணங்களால் காலிஸ்தான் பிரிவினைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை. எனினும், ட்ரூடோவின் இந்தப் பயணத்தை கனடா செயல்படுவதற்கான உத்தரவாதம் பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்றார் அவர்.
ஜஸ்டின் ட்ரூடோ அவமானப்படுத்தப்படவில்லை என்று கருதும் சிபல் சமீபத்தில் இரு நாட்டு உறவுகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறுகிறார்.
இந்தியாவுக்கு அணுமின் உற்பத்திக்காக யுரேனியம் அளிக்க 2015இல் கனடா உடன்படிக்கை செய்துகொண்டது இருநாட்டு உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகக் கருதப்பட்டது.

கீழ்நிலை அமைச்சர் ஒருவர் வரவேற்க அனுப்பப்பட்டது பெரிதுபடுத்தப்படுவதாகக் கூறும் சிபல், "ஓர் அரசுமுறைப் பயணத்தை சீர்குலைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இருநாட்டு நலன் கருதி அதை வெற்றியடையச் செய்யவே விரும்புவார்கள்," என்கிறார் அவர்.
- BBC - Tamil

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 19 முதல் 25 வரை 12 ராசிகளுக்கும்

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 19 முதல் 25 வரை 12 ராசிகளுக்கும்
மேஷராசி அன்பர்களே! தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது.
சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களுடன் விவாதம் செய்யாமல், அனுசரித்துச் செல்வது நல்லது.
குழந்தைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
அலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
மாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும். ஆனால், தேவையான பணம் இருப்பதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி: 19, 22, 23, 24; பரணி: 19, 20, 23, 24, 25; கார்த்திகை: 19, 20, 21, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அசுவினி: 20, 21, 25; பரணி: 21, 22; கார்த்திகை: 22, 23
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
rishaba_16411ரிஷபராசி அன்பர்களே! எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
மாணவ மாணவியர் மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
கார்த்திகை: 19, 20, 21, 24, 25; ரோகிணி: 20, 21, 22, 25; மிருகசீரிடம்: 19, 21, 22, 25
அதிர்ஷ்ட எண்கள்:  2, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 22, 23; ரோகிணி: 19, 23, 24; மிருகசீரிடம்: 20, 23, 24
வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
mithuna_16267மிதுனராசி அன்பர்களே! குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும்.
பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கணவன் – மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம்.
புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.
கலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மிருகசீரிடம்: 19, 21, 22, 25; திருவாதிரை: 19, 20, 22, 23, 24; புனர்பூசம்: 19, 20, 21, 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 20, 23, 24; திருவாதிரை: 21, 25; புனர்பூசம்: 22
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே
kadaga_16065கடகராசி அன்பர்களே! பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.
நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.
அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம்: 19, 20, 21, 23, 24, 25; பூசம்: 20, 21, 22, 24, 25; ஆயில்யம்: 21, 22, 23, 25
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 22; பூசம்: 19, 23; ஆயில்யம்: 19, 20, 24
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே
simma_16013சிம்மராசி அன்பர்களே! வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
பேச்சினால் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். செலவுகள் அதிகரித்தாலும்கூட அதற்கேற்ப பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
அதிர்ஷ்ட நாள்கள்:
மகம்: 19, 22, 23, 24; பூரம்: 19, 20, 23, 24, 25; உத்திரம்: 19, 20, 21, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மகம்: 20, 21, 25; பூரம்: 21, 22; உத்திரம்: 22, 23
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
kanni_16408கன்னிராசி அன்பர்களே! இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும்.
அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம்.
பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனவி இடையில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.
மாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திரம்: 19, 20, 21, 24, 25; அஸ்தம்: 20, 21, 22, 25; சித்திரை: 19, 21, 22, 25
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திரம்: 22, 23; அஸ்தம்: 19, 23, 24; சித்திரை: 20, 23, 24
வழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே 
dhulam_16133துலாம்ராசி அன்பர்களே! வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.
மாணவர் மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை: 19, 21, 22, 25; சுவாதி: 19, 20, 22, 23, 24; விசாகம்: 19, 20, 21, 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 6, 7
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
சித்திரை: 20, 23, 24; சுவாதி: 21, 25; விசாகம்: 22
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
viruchi_16564விருச்சிகராசி அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.
வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.
வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கைத் தேவை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும்  வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம்: 19, 20, 21, 23, 24, 25; அனுஷம்: 20, 21, 22, 24, 25; கேட்டை: 21, 22, 23, 25
அதிர்ஷ்ட எண்கள்: 5, 8
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
விசாகம்: 22; அனுஷம்: 19, 23; கேட்டை: 19, 20, 24
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்  காணக் கண் அடியேன் பெற்றவாறே
dhanushu_16384தனுசுராசி அன்பர்களே! பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது  நல்லது.  வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டி வருவார்கள்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.
வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்புத் தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச்  செல்வது நல்லது.
மாணவ மாணவியர் தேவை இல்லாமல்  வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
மூலம்: 19, 22, 23, 24; பூராடம்: 19, 20, 23, 24, 25; உத்திராடம்: 19, 20, 21, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
மூலம்: 20, 21, 25; பூராடம்: 21, 22; உத்திராடம்: 22, 23
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை 
mgaram_16119மகரராசி அன்பர்களே!  பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி வரும்.  உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் சாதகமாக முடியும்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.
கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.
மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர்கள் தருவார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம்: 19, 20, 21, 24, 25; திருவோணம்: 20, 21, 22, 25; அவிட்டம்: 19, 21, 22, 25
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 22, 23; திருவோணம்: 19, 23, 24; அவிட்டம்: 20, 23, 24
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கடைந்த வர்க்கெலாம்
நன்னெறியாவது நமசிவாயவே. 
kumba_16461கும்பராசி அன்பர்களே! வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
மாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நாள்கள்:
அவிட்டம்: 19, 21, 22, 25; சதயம்: 19, 20, 22, 23, 24; பூரட்டாதி: 19, 20, 21, 23, 24, 25
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 20, 23, 24; சதயம்: 21, 25; பூரட்டாதி: 22
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான் 
meenam_16247மீனராசி அன்பர்களே!   பணப்புழக்கம் அதிகரிக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது.
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.
வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.
கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிரத்தை எடுத்துப் படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கில்லை.
அதிர்ஷ்ட நாள்கள்:
பூரட்டாதி: 19, 20, 21, 23, 24, 25; உத்திரட்டாதி: 20, 21, 22, 24, 25; ரேவதி: 21, 22, 23, 25
அதிர்ஷ்ட எண்கள்:  3, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 22; உத்திரட்டாதி: 19, 23; ரேவதி: 19, 20, 24
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

வேலைக்காரர் கோடிஸ்வரரானார்

வேலைக்காரர் கோடிஸ்வரரானார்
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா, திருமணமாகாத இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

இதனையடுத்து அவரிடம் 40 ஆண்டுகளாக வேலை பார்த்த வினு பாய், தனது குடும்பத்தினருடன் பங்களாவை விட்டு வெளியேறினார்.

அடுத்து என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த வினு பாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது, சில நாட்களுக்கு முன் கஜ்ராஜ் சிங் ஜடேஜாவின் உறவினர்கள் 8 பேர் காரில் வந்து, வீட்டில் இருந்த வினு பாயை கடத்திச் சென்றுள்ளனர்.

வினுபாய்க்கு, சுமார் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கஜ்ராஜ் சிங் ஜடேஜா உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அதனை தங்கள் பெயருக்கு எழுதித் தருமாறும் கூறி அந்தகும்பல் சரமாரியாக அடித்துள்ளனா்.

இதற்கிடையே வினுபாயின் மகன் போலீசில் புகார் அளிக்க, விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அவரை மீட்டனர்.இவ்வளவு பெரிய சொத்தை தனக்கு கஜ்ராஜ் எழுதிய வைத்ததை அறிந்து, வினு பாய் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.

தனது எஜமானர் குறித்து கூறுகையில், ‘அவரிடம் நான் வேலைக்கு சேர்ந்த பிறகு, எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார், என் பிள்ளைகளை தனது பிள்ளைகளாகவே கருதிய அவர், உயர் கல்விக்காக இங்கிலாந்து அனுப்பி படிக்க வைத்தார்.

அந்த நன்றிக்கடனை எப்போது அடைப்பது என்பது தெரியாமல் இருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக அவர் எங்களை விட்டு பிரிந்து விட்டார்.

ரூ.600 கோடி சொத்துக்களை எங்களுக்கு எழுதி வைத்து விட்டு, ஏழேழு தலைமுறையினரும் எப்போதுமே தீர்க்க முடியாத நன்றிக் கடனை எங்களுக்கு அவர் விட்டுச் சென்றுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

Sunday, February 18, 2018

உடற்பயிற்சி செய்த பின்னர் செய்யக்கூடாதவை

உடற்பயிற்சி செய்த பின்னர் செய்யக்கூடாதவை
இன்று பலருக்கும் உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனால் ஏராளமானோர் அன்றாடம் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான நல்ல பழக்கம் தான்.
இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
பொதுவாக உடற்பயிற்சியை செய்யும் போது, அடிக்கடி சிறிது நீரைப் பருகலாம்.

ஆனால் உடற்பயிற்சி செய்து முடித்த பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் உடற்பயிற்சியால் பாதிக்கப்பட்ட தசைகள் சரியாவதோடு, உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, தசைகளும் நன்கு வளர்ச்சி பெறும்.
சிலர் உடற்பயிற்சி செய்து முடித்த பின் எனர்ஜி பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் என்று வாங்கிப் பருகுவார்கள்.
ஆனால் இம்மாதிரியான பானங்கள் உடலுக்கு நல்லதல்ல. சரி, உங்களுக்கு உடற்பயிறற்சிக்கு பின் எந்த பானங்களைப் பருகக் கூடாது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஸ்போர்ட்ஸ் பானங்கள்
மார்கெட்டுகளில் ஸ்போர்ட்ஸ் பானங்கள் உடற்பயிற்சிக்கு பின் குடிக்க ஏற்ற பானமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதை நம்பிக் கொண்டு பலரும் உடற்பயிற்சிக்குப் பின் இந்த பானங்களைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பானங்களில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகமாகவும், ஊட்டச்சத்துக்கள் ஏதும் இல்லாமலும் உள்ளது. வேண்டுமானால் சில பிராண்டுகளில் சில வைட்டமின்களும், எலக்ட்ரோலைட்டுகளும் இருந்தாலும், அதிகளவு சர்க்கரை மற்றும் செயற்கை ப்ளேவர்கள் இருப்பதால், இம்மாதிரியான பானங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
மது
மாலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின், இரவில் ஒரு டம்ளர் ஒயின் குடிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். பொதுவாக மது பானங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.
இதை உடற்பயிற்சிக்கு பின் குடித்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதற்கு பதிலாக, வறட்சியை உண்டாக்கும்.

மேலும், மது பானங்களில் வெற்று கலோரிகள் அதிகமாகவும், எவ்வித ஊட்டச்சத்துக்களும் இல்லை.
இப்படி வெற்று கலோரிகள் நிறைந்த பானங்களைக் குடித்தால், அது உடலில் கொழுப்புக்களின் அளவைத் தான் அதிகரிக்கும்.

டப்பாவில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்
டப்பாவில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் ஆரோக்கியமானது போன்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இப்படி டப்பாவில் விற்கப்படும் பழச்சாறுகள் நற்பதமான பழங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது அல்ல.
முழுமையாக செயற்கை ப்ளேவர்களைக் கொண்டது. இத்தகைய கெமில்லல் கலந்த பானங்களை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பது நல்லதல்ல. சொல்லப்போனால் இந்த பானங்களில் சுக்ரோஸ் கார்ன் சிரப் தான் அதிகம் உள்ளது. இவை உடல் பருமனை உண்டாக்கி, மெட்டபாலிச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
காபி
உடற்பயிற்சிக்கு பின் பலருக்கு ஒரு கப் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் இப்படி குடித்தால், ஏற்கனவே உடற்பயிற்சியின் போது வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த இதயம், காபி குடித்த பின் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும்.
இதற்கு அதில் உள்ள காப்ஃபைன் தான் காரணம். உடற்பயிற்சிக்குப் பின் காபி குடித்தால், அது இதய படபடப்பை உண்டாக்குவதோடு, தூக்க பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேலும் காபி உடல் வறட்சியையும் ஏற்படுத்தும்.

உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!
இயற்கை பானம்
சுவைமிக்க நீரை வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். அதற்கு நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சற்று பெரிய துண்டுகளாகவே நறுக்கி, ஒரு பெரிய ஜாடியில் போட்டு, நீரை நிரப்பி, பல மணிநேரம் ஊற வையுங்கள். பின் அந்த நீரை வடிகட்டி வேண்டிய நேரம் குடித்து மகிழுங்கள்.

சால்லேட் மில்க்
மற்றொரு சுவையான பானம் சாக்லேட் மில்க். அதிலும் வீட்டிலேயே சாக்லேட் மில்க்கை தயாரித்து குடிப்பது நல்லது. இந்த பானத்தில் சாதாரண பாலை விட இரண்டு மடங்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது.
இது உடற்பயிற்சிக்குப் பின் குடிக்க ஏற்ற பானங்களுள் ஒன்றாகும்.

செர்ரிப் பழ ஜூஸ்
செர்ரிப் பழ ஜூஸ் உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதற்கு ஏற்ற அற்புதமான பானங்களுள் ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்.
மேலும் இந்த ஜூஸ் உடலினுள் ஏற்பட்ட காயங்களைக் குறைத்து, தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்து புத்துயிர் பெறச் செய்யும்.