Advertisement |
அத்துடன், நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பொதுவாக சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது (40 கிலோ மீற்றர்) ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளையில் குளிரான நிலைமையும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனி மூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கின் ஆழம் கூடிய கடற்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடற்பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படலாம்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு திசையில் இருந்து வடகிழக்குதிசை நோக்கி வீசும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக அம்பலாங்கொடை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பகுதிகளிலும் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பகுதிகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அப்போது அக்கடற் பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: