Thursday, January 25, 2018

இலங்கையில் அதிசயம்! தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள்

இலங்கையில் அதிசயம்! தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள்
இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
arator" style="clear: both; text-align: center;">

பதுளை - செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் நேற்று அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் காணப்பட்டதாக லுனுகல பிரதேச செயலாளர் டீ.எம்.எல்.எச். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மாணிக்க கற்களை களவாடிச் செல்ல பலர் முயன்று வருவதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மாணிக்க கற்கள் மிகுந்த கீனகொட என்ற இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாணிக்க கல் புதையல் தொடர்பில் ஆபரணங்கள் மற்றும் மாணிக்க கல் அதிகார சபையிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்க கற்களை பொறுப்பேற்றுள்ள அதிகார சபை, அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இதே பகுதியில் பெருந்தொகை மாணிக்க கற்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் மேலும் பல மாணிக்க கல் புதையல்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குளிரான காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

குளிரான காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளையில் குளிரான நிலைமை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பொதுவாக சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது (40 கிலோ மீற்றர்) ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளையில் குளிரான நிலைமையும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனி மூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கின் ஆழம் கூடிய கடற்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடற்பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படலாம்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு திசையில் இருந்து வடகிழக்குதிசை நோக்கி வீசும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக அம்பலாங்கொடை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பகுதிகளிலும் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பகுதிகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அப்போது அக்கடற் பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 18, 2018

தை திருநாளை கொண்டாடிய கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியூ தமிழ்   மக்களுடன் சேர்ந்து பொங்கல் திருநாளை கொண்டாடினார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பொங்கல் திருநாள் உலகமெங்கும் வகிக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகர்கள் மட்டும் மற்ற மதத்தினரும் சிறப்பாக கொண்டாடப்படுகிறார்கள்.

அந்த வகையில் கனடாவில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ் மக்களுடன் சேர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியூ பொங்கல் திருநாளை கொண்டாடினார். அவர் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றார். 
இதைக்குறித்து அவர் தனது ட்விட்டார் பக்கத்தில், இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். மேலும் தாம் பங்கேற்ற தை பொங்கல் விழாவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்த்-ன் பாராளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியர்!

48 வருடங்களுக்கு முன்பு, ஒரு இந்திய தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளது!
48 வருடங்களுக்கு முன்பு, ஒரு இந்திய தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளது!
சுவிஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்னும் பெருமையை பெற்று அனைவரது கவணத்தினையும் தன் பக்கம் ஈர்த்துள்ளவர் நிக்கோலஸ் சாமுவேல் ககர்.


கர்நாடக மாநிலம் உடப்பி-யில் உள்ள CSI லாம்பெர்ட் மெமோரியல் மருத்துவமனையில், 48 ஆண்டுகளுக்கு முன்பு அனுஷியா என்னும் இந்திய தாய்-க்கு மகனாய் பிறந்தார். பின்னர் அவரது தாய் அவரை வேண்டாம் என விட்டுச் சென்றார்.
இதனால், மே.,1 1970 ஆண்டு சுவிஸ் தம்பதியருக்கு (ப்ரிட்ஸ் மற்றும் எலிசபத்) தத்து குழந்தையாக சென்றார். எனினும் அத்தம்பதியர் தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பவில்லை, அடுத்த 4 ஆண்டு காலம் கேரளாவில் குடிபெயர்ந்து அவரை வளர்த்தனர். 
கேரளாவில் அவர்கள் வாழ்ந்தபோது, எலிசபத் இந்திய-சுவிஸ் பள்ளி ஒன்றின் ஆசிரியராக பணியாற்றியுள்ளர், ப்ரிட்ஸ் நட்டூர் தொழில்நுட்ப பயிற்சி மையம் (NTTF) ஆயுத தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னர் சாமுவேல் 4 வயது குழந்தையக இருந்தபோது தனத தாய்நாடான இந்தியாவை விட்டு பிரிந்து சுவிட்சர்லாந்து சென்ற இவரின் பெற்றோர்(தத்து) அங்கு விவசாயம் பார்த்து கிடைத்த வருமானத்திலேயே அவரை படிக்க வைத்தனர்.
ஆனால் தற்போது அவர் சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக உருவெடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தனது வாழ்க்கை பயணத்தினைப் பற்றிப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவை பூர்வீகமாக கொண்டு சுவிட்சர்லாந்தில் வாழும் 143 பேர்களில் ஒருவரான இவர், தான் சிறுவயதில் வாழ்ந்த கேராளா மக்களுடன் தற்போது தொடர்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

ஏப்ரல் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம்

ஏப்ரல் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம்
வரும் ஏப்ரல் மாதம் முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் பயணிகள் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்துவது கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக தேவையான வாகனங்களை அரசு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. எனவே, பெரும்பாலான நேரங்களில் மக்கள் தனியார் வாகனங்களையே, அதாவது டாக்ஸி, மினி பஸ், ஆட்டோ, தனியார் பஸ் என்று பயன்படுத்துக்கின்றனர். அப்படி பயன்படுத்தும் போது சிலசமயம் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள். மேலும் திருட்டு, கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற செயல்கள் நடைபெறும் போது குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காலதாமதமாகுகிறது. 
எனவே, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் ஆட்டோ, டாக்சிகளில் மற்றும் பஸ்களில் அவசியமாக ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 
ஜிபிஎஸ் கருவி பொருத்துவதன் மூலம், வாகனங்கள் செல்லும் பாதையை துல்லியமாக போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினரால் கண்காணிக்க முடியும். பயணத்தின்போது விபத்தோ அல்லது வேறு அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக உதவ முடியும். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெங்களூருவில் வைக்கப்பட்ட தமிழ் பேனர்களை கிழித்த கன்னட அமைப்பினர்!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்து பேனர்களை கன்னட அமைப்பினர் கிழிந்தெறிந்துள்ளனர்!
பெங்களூருவின் ட்ரினிட்டி ரோட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த வாழ்த்து பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் இதேப்போல் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். 
இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும் எந்த மாற்றமும் இல்லை, இந்நிலையில் தற்போதும் அங்கு தமிழில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டது வருவது பெங்களூரு வாழ் தமிழர்களிடையே பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது!.

Wednesday, January 17, 2018

தொண்டையில் தொலைபேசியை சொருகி தாயை கொலை செய்த மகன்

தனது தாயின் தொண்டையில் தொலைபேசியை சொருகி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் குறித்த தாயின் மகனை ஊவா பரணகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஊவாபரணகம –மொரகொல்ல உமான கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான ரத்னாயக்க முதியன்சலாகே கருணாவதி என்ற தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தன்னுடைய தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து கடந்த 16ஆம் திகதி ​பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
15ஆம் திகதி தானும், தன்னுடைய மனைவியும் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், மறுநாள் காலை  வீட்டுக்கு வந்தபோது தனது தாய் உறங்கிய நிலையிலேயே உயிரிழந்திருப்பதாக சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
எனினும், குறித்த மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக தெரிவித்து நீதவான் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், நீதவானின் உத்தரவுக்கமைய   பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்த பெண்ணின் உடலம் பதுளை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சார சபை ஊழியர்கள் நாடு பூராகவும் பணி நிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்.

எனவே அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தமது ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டமையை கண்டித்து, மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் பணி நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

Tuesday, January 16, 2018

யாழ். பல்கலை கலைப்பீட விரிவுரைகளை மீள ஆரம்பிக்க முடிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கலைபீட மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்ட பொதுவான தடையை உடனடியாக அமுலுக்கும் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 18.01.2018ம் திகதியிலிருந்து (வியாழக்கிழமை) அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் எனவும், யாழ் பல்கலைக்கழக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கடந்த வாரம் வகுப்புத்தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டில்-3-பேர்-பலி

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் போட்டிகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

காளை அடக்கும் போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் பார்வையிட்டவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

நீண்ட போராட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றது.

இதன்படி இந்த ஆண்டு தடையின்றி ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடத்தப்படுகின்றன.

போட்டிகள் தமிழக அரசாங்கத்தின் அனுசரனையுடனேயே இடம்பெறுவதுடன், வெற்றியாளர்களுக்கு மிகப்பெறுமதியான பரிசில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Monday, January 15, 2018

கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள்

கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் வீடியோவை வெளியிட்ட தீவிரவாதிகள்
நைஜீரியாவில் 4 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பிடித்து வைத்திருக்கும் வீடியோ ஒன்றை போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.
நைஜீரியாவின் வடகிழக்கே சிபோக் நகரில் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 270 பள்ளி மாணவிகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து எவ்வித தகவலும் நீண்ட நாட்களுக்கு வெளிவராமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் பள்ளி மாணவிகளை போகோ ஹரம் பயங்கரவாதிகளே கடத்தியிருக்க வாய்ப்பு உள்ளதாக ராணுவத்தினர் தகவல் வெளியிட்டனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளில் 12 பேர் தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வருகின்றனர். அவர்களை பிடித்து வைத்திருப்பது போன்ற 21 நிமிட வீடியோ ஒன்றை போகோ ஹரம் தீவிரவாதிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், நாங்கள் சிபோக் நகர பள்ளி மாணவிகள். திரும்பி வரவேண்டும் என எங்களுக்காக நீங்கள் அழுது கொண்டிருக்கும் ஒரு சிலரில் உள்ளவர்கள் நாங்கள்.
அல்லாவின் கருணையால், நாங்கள் இதுவரை திரும்பி வரவேயில்லை என ஒரு மாணவி கூறியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் பறந்த பட்டங்கள்











யாழ்நோக்கிச் சென்ற புகையிரதத்தில் தீ

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற குளிரூட்டப்பட்ட புகையிரதம்     மீசாலை புத்தூர் சந்தி பகுயியில் புகையிரதத்தின் இயந்திரபகுதியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.... தீயைணப்பு வீரர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


Saturday, January 13, 2018

இளைஞர் தற்கொலை விவகாரம்; புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்


தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளார்.

அவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் நிலைய அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை - பெஸ்தியன் மாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு கஞ்சாவுடன் 17 வயதான குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

எவ்வாறாயினும் இவர் சிறைக்கூடத்தில் தனது ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

ஹப்புத்தளே கிரிமானகம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்ததுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விஷேட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகளுக்கு அமைவாக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Friday, January 12, 2018

வேலை நிறுத்தம் நிறைவுக்கு வந்தது

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த தாதியர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை முதல் நிறைவுக்கு வந்துள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது.

நாளாந்தம் பணிக்கு வரும் நேரத்தை பதிவுசெய்வதற்கு கைவிரல் அடையாள பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுத்துவதற்கு எதிராக இந்த பணி நிறுத்த முன்னெடுக்கப்பட்டு வந்தது.

கைவிரல் அடையாள பதிவுமுறை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் அதனை நிறுத்துவதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற சந்திப்பில், கைவிரல் பதிவில் இருக்கின்ற பிரச்சினையை தீர்க்கும் வரை சாதாரண முறையில் கையொப்பமிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடைமுறை பிரச்சினை சம்பந்தமாக அமைச்சின் அதிகாரிகளுடன் பேசுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துமூலம் இது சம்பந்தமாக உறுதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து பணி நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழன் பட்டம் தயாரிப்பில்

தைப்பொங்கல் தினத்தில் பறக்க விடுவதற்குத் தயார் செய்யப்படுகின்றது தமிழுணர்வுடன் பட்டங்கள். தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் குழுவிற்கு வாழ்த்துகள்








Wednesday, January 10, 2018

இன்றைய (11-01-2018) உங்கள் ராசிபலன்


மேஷம்:
இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் நிதானமாக பேசுவது பிரச்சனை வராமல் தடுக்கும். மனோபலம் கூடும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்தரும். திறமை வெளிப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 

ரிஷபம்: 
இன்று வீண் அலைச்சல், காரியதாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். தடை, தாமதம் ஏற்பட்டாலும் எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 


மிதுனம்:
 இன்று பயணங்கள் செல்ல நேரலாம். அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும் போது கவனமாக இருப்பது வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 

கடகம்: 
இன்று புதிய ஆர்டர்கள் வருவது, புதிய வாடிக்கையாளர்கள் வருவதும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு இல்லாதது போல் தோன்றினாலும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5. 

சிம்மம்: 
இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

கன்னி:
 இன்று தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி, பாடங்களை நம்பிக்கையுடன் படிப்பீர்கள். சகமாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 

துலாம்: 
இன்று தடைதாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 

விருச்சிகம்: 
இன்று அலைச்சல் இருக்கும். எதிர் பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 

தனுசு: 
இன்று செலவு ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வழக்கத்தை விட பணிசுமை கூடும். குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணிகளை கவனிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

மகரம்: இன்று குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9


கும்பம்: 
இன்று பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் நன்மை உண்டாகும். மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பதால் நன்மை உண்டாகும். மதிப்பெண் கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

மீனம்: இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்ப்பு கள் நீங்கும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு தலைமை தாங்கி நடத்தும் திறமை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9