Advertisement |
இன்று முல்லைத்தீவு கடற்பகுதி கருமைநிறத்தில் மாற்றமடைந்து வருவதாக மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைகாரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.நாட்டைச்சூழவுள்ள கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பானவே காணப்படுவதாகவும் கடல் அலைகள் மேலெழுவதாகவும் கூறுகின்றனர். வானிலை அவதான நிலையம் 29.11.2017 12.00 மணிக்கு வழங்கிய முன்னெச்சரிக்கையின்படி தென்,சப்பிரகமுவ,மத்திய, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீட்சியை எதிர்பார்க்கலாம் என்றும், காற்றின் வேகம் 60- 70kmph வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஏனைய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீட்சியை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.எனவே மீனவர்கள், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்படுகின்றனர்.
0 comments: