Thursday, November 30, 2017

பொதுமக்களுக்கான யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வேண்டுகோள்



தற்போதைய பருவமழைக் காலத்தைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். குறிப்பா டெங்கு  நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.  மருத்துவ விடுதிகளில் அளவுக்கதிகமான நோயாளிகள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மிகுந்த நெருக்கடியான நிலையில் வைத்திய சேவையை வழங்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் நோயாளிகளைப் பார்வையிட வருவதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்கு இருவர்  மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.

மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவருடன் ஒருவர் மாத்திரமே நிற்பதற்கு அனுமதிக்கப்படுவர். குழந்தைகள் பிறக்கின்ற போது வைத்தியசாலைக்கு வருகைதந்து பார்வையிடுவதை இயன்றவரை தவிர்த்து வீடு சென்ற பின்னர் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

பொதுமக்கள் நோயாளியைப் பார்க்க வரும்போது தாம் கொண்டுவரும் உணவு உடை முதலான பொருள்களைக் கொடுத்துவிட்டு விரைவாக விடுதிகளை விட்டு வெளியேறி வைத்தியசேவையை வழங்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்கு இருவர் மாத்திரமே அருகில் செல்ல முடியும்


உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் தரக்கூடியதும், காய்ச்சலை தணிக்கவல்லதும், வயிற்று கோளாறுகளை சரிசெய்ய கூடியதுமான கேழ்வரகுவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். உன்னதமான உணவாக விளங்குவது கேழ்வரகு.

இதில், புரதம், விட்டமின், மினரல் உள்ளிட்ட ஆரோக்கியம் தரக்கூடிய வேதிப்பொருட்கள் உள்ளன. கேழ்வரகுவை சாப்பிட்டுவர நமக்கு நார்ச்சத்து மிகுதியாக கிடைக்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை உடையது. கேழ்வரகுவை பயன்படுத்தி முதியோர், குழந்தைகள், நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு, பனைவெல்லம், பால். கேழ்வரகை நீர்விட்டு ஊறவைத்து, அதன் தோலை நீக்கி விட்டு காயவைத்து மாவாக்கவும்.
இந்த மாவை நீர்விட்டு கலக்கி, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இதனுடன் பனைவெல்ல கரைசல் சேர்த்து கஞ்சி பதத்தில் காய்ச்சவும். பின்னர் காய்ச்சிய பால் சேர்க்கவும். இந்த கஞ்சியை சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். பல்வேறு நன்மைகள் கொண்ட கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கெட்ட கொழுப்பை கரைக்கிறது. ரத்தசோகையை போக்கும் உணவாகிறது. கேழ்வரகு புல்லை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு புல், மிளகுத்தூள், சீரகம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், சிறிது சீரகம், ஒரு கைப்பிடி கேழ்வரகு புல், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் குணமாகும். வயிற்று வலி, வயிற்று கடுப்பு, உப்புசத்தை போக்கும் உள்மருந்தாகி பயன்தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்கும் கேழ்வரகுவை பயன்படுத்தி கட்டிகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு, விளக்கெண்ணெய். செய்முறை: கேழ்வரகு மாவை நீர்விட்டு கரைக்கவும்.
இதை, ஒரு பாத்திரத்தில் போட்டு களிபதத்தில் வேக வைக்கவும். இதனுடன், விளக்கெண்ணெய் விட்டு கலக்கவும். இந்த பசை இளம்சூடாக இருக்கும்போது கட்டிகள் மீது பூசிவர கட்டிகள் பழுத்து உடையும். வீக்கம், வலி சரியாகும். இளம் தாய்மார்கள் கேழ்வரகை உணவாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்றில் வளரும் குழந்தைகளின் எலும்பு, பற்கள் பலம் பெறும். மூளை ஆரோக்கியமாக இருக்கும்.
கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை போக்குகிறது. கொழுப்பு சத்தை வெளியேற்றும். தலைவலி, தலைபாரம், தலைநீர் ஏற்றத்தை சரிசெய்யும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மிளகு, மஞ்சள், பால். இரவு நேரத்தில், அரை ஸ்பூன் மிளகு தூள், அரை ஸ்பூன் மஞ்சள் பொடி ஆகியவற்றை பாலில் போட்டு கொதிக்க வைத்து சிறிது இனிப்பு சேர்த்து குடித்துவர தலைநீர் ஏற்றம், தலைவலி குறையும். நெஞ்சக சளி வெளியேறும்.

Wednesday, November 29, 2017

கொழும்பில் தலைமறைவாகியிருந்த வாள்வெட்டுக் குழு அதிரடி கைது


கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்தது. யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டனா் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த 3பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் தற்போது யாழ் பொலிஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இதனடிப்படையில் மேலும் பலர் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

அழகு பராமரிப்பிற்கு வேப்பிலையை யூஸ் பண்ணுங்க…

கடவுள் என்பவர் எப்படி நமது பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்று நம்புகிறோமோ, அதேப் போன்று கடவுளாக வணங்கும் வேப்ப மரமும் நமது உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணப்படுத்தும். சொல்லப்போனால், வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். இந்த வேப்ப மரம் நமக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம். இந்த வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். ADVERTISEMENT அதிலும் இந்த வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர் வேத மருத்துவத்தை மேற்கொண்டால், சரிசெய்ய முடியாத நோயையும் சரிசெய்யலாம் என்று சொல்வதற்கு காரணம் வேப்பிலையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இப்போது அத்தகைய வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!

வேப்பிலையின் நன்மைகள்:
* வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
* ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.
* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
* வேப்பிலையில் வலியைப் போக்கும், காய்ச்சலைக் சரிசெய்யும், காயங்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. எனவே இதனை காயங்கள், காது வலி, தலை வலி போன்றவற்றிற்கு பயன்படுத்தினால், குணமாகிவிடும்.
* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும். வேறு எப்படியெல்லாம் வேப்பிலையை அழகுப் பொருளாகப் பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வீதியில் இளைஞரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற குழு

யாழ்ப்பாணம், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை தள்ளிவிழுத்திக் கைவிலங்கிட்டு ஒரு குழு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சுமார் 28 வயதுடையவர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்தவர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். எனினும் தம்மால் எவரும் கைதுசெய்யப்படவில்லைஎனவும் தமது பாவனையில் பச்சைநிற முச்சக்கர வண்டி இல்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர். பிந்திக் கிடைத்த தகவல்களின்கடி ஆவா குழு உறுப்பினர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தன்னியக்க அழைப்பு பதிவு automatic Call recorder



சிலருக்கு தொலைபேசியில் தாங்கள் பேசிய விடயத்தை கூட மறந்து போய் விடுவார்கள். சிலர் அடுத்தவர்கள் தொலைபேசியில் கூறுவதை மறந்து விடுவார்கள். இப்படியானவர்களுக்கு மிகவும் பயனுள்ள  ஒரு ஆப்பிளிகேசன்தான்இது.சிலருக்கு தொலைபேசி முலம் மிரட்டல்கள் வரலாம் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தொலைபேசி உரையாடல் தேவைப்படலாம். அல்லது  உங்கள் காதலன்/காதலி உங்களுடன் உரையாடியவற்றை மீள கேட்டு சந்தோசம் அடையலாம். இது எல்லாவற்றிற்கும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். 

நீங்கள் விரும்பும் எந்தவொரு தொலைபேசி அழைப்பையும் பதிவுசெய்து மீள கேட்க முடியும்

நீங்கள் விருப்பும் எந்தவொரு அழைப்பையும் பதிவு செய்ய முடியும்.
உங்கள் தொலைபேசி யில் மெமறி போதவில்லையாயின் google drive,dropbox போன்றவற்றிலும் சேமிக்கலாம். Mp3 மற்றும். Wav. போன்ற ஒலி வடிவங்களில் மிகத்தெளிவாக அழைப்புக்களை பதிவு செய்யலாம்.

இந்த  அப்பிளிகேசனை ஓரு தடவை உங்கள் தொலைபேசியில் நிறுவினால் போதும் உங்களுக்கு வரும் அனைத்து அழைப்புக்களும்,நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புக்களும் தானியங்கி முறையில் பதிவு செய்யப்படும்.
 இந்த அப்பிளிக்கேசனை டவுன்லோடு பண்ண இங்கே கிளிக் பண்ணுங்க




முல்லைத்தீவு கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்- மீனவர்கள் அச்சம்




இன்று முல்லைத்தீவு கடற்பகுதி கருமைநிறத்தில் மாற்றமடைந்து வருவதாக மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.  தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைகாரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.நாட்டைச்சூழவுள்ள கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பானவே காணப்படுவதாகவும் கடல் அலைகள் மேலெழுவதாகவும் கூறுகின்றனர். வானிலை அவதான நிலையம் 29.11.2017 12.00 மணிக்கு வழங்கிய முன்னெச்சரிக்கையின்படி தென்,சப்பிரகமுவ,மத்திய, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீட்சியை எதிர்பார்க்கலாம் என்றும், காற்றின் வேகம் 60- 70kmph வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஏனைய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீட்சியை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.எனவே மீனவர்கள், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்படுகின்றனர்.