Sunday, March 4, 2018

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் ஆபத்தான நிலை

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் ஆபத்தான நிலை
இலங்கை முழுவதும் மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சி, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மேற்கொள்ளாமை காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளது.
இந்த வருடம் அல்லது அடுத்த வருடத்தில் பிரதான மின்சார கட்டமைப்பிற்கு 1000 மெகாவோட் மின்சார சக்தியை இணைக்கும் நடவடிக்கை 2020ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடி நிலை காரணமாக தனியார் நிறுவனங்களிடம் அவசர மின்சார கொள்வனவு செய்ய நேரிடும் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டமை இந்த நிலைமைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடத்திற்கு 200 மெகாவோட் மின்சார தேவை காணப்படுகின்ற நிலையில் தற்போது 500 மெகாவோட் மின்சார பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொறியியலாளர் சங்கம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு தீர்வு வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சிவன் கோவிலுக்குள் தஞ்சமடைந்த மைத்திரி! பொங்கியெழுந்த பௌத்த பிக்கு

சிவன் கோவிலுக்குள் தஞ்சமடைந்த மைத்திரி! பொங்கியெழுந்த பௌத்த பிக்கு
மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மட்டக்களப்பு சிவன் கோவிலுக்கு நேற்று சென்ற ஜனாதிபதி மத வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.
சிவன் கோவிலுக்கு அருகில் இருந்த ஏரியை அவதானித்த ஜனாதிபதி, புனர்நிர்மாண பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஆளுநரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்தப் பகுதியிலுள்ள விகாரைக்கு வருகை தராமல் ஜனாதிபதி சிவன் கோவிலுக்கு சென்றுமைக்கு எதிராக, ஸ்ரீ மங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகினார்.
எனினும் நேற்றைய தினம் ஸ்ரீமங்கலராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு அவரின் நலம் விசாரித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புகொடி போராட்டம் நடத்தப்படவுள்ளமையை அறிந்து கொண்ட ஜனாதிபதி, விகாரைக்கு வருகை தந்ததாக சுமனரத்ன தேரர் ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்
விகாரைக்கு வருகைத்தந்த ஜனாதிபதி 15 நிமிடங்கள் மாத்திரமே அங்கு செலவிட்டுள்ளார் என தேரர் கூறியுள்ளார்.

Thursday, March 1, 2018