Sunday, March 4, 2018

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் ஆபத்தான நிலை

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் ஆபத்தான நிலை
இலங்கை முழுவதும் மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சி, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மேற்கொள்ளாமை காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளது.
இந்த வருடம் அல்லது அடுத்த வருடத்தில் பிரதான மின்சார கட்டமைப்பிற்கு 1000 மெகாவோட் மின்சார சக்தியை இணைக்கும் நடவடிக்கை 2020ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வாறான நெருக்கடி நிலை காரணமாக தனியார் நிறுவனங்களிடம் அவசர மின்சார கொள்வனவு செய்ய நேரிடும் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டமை இந்த நிலைமைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடத்திற்கு 200 மெகாவோட் மின்சார தேவை காணப்படுகின்ற நிலையில் தற்போது 500 மெகாவோட் மின்சார பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொறியியலாளர் சங்கம் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் காணப்படுவதாகவும், இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு தீர்வு வழங்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சிவன் கோவிலுக்குள் தஞ்சமடைந்த மைத்திரி! பொங்கியெழுந்த பௌத்த பிக்கு

சிவன் கோவிலுக்குள் தஞ்சமடைந்த மைத்திரி! பொங்கியெழுந்த பௌத்த பிக்கு
மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மட்டக்களப்பு சிவன் கோவிலுக்கு நேற்று சென்ற ஜனாதிபதி மத வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.
சிவன் கோவிலுக்கு அருகில் இருந்த ஏரியை அவதானித்த ஜனாதிபதி, புனர்நிர்மாண பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஆளுநரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்தப் பகுதியிலுள்ள விகாரைக்கு வருகை தராமல் ஜனாதிபதி சிவன் கோவிலுக்கு சென்றுமைக்கு எதிராக, ஸ்ரீ மங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகினார்.
எனினும் நேற்றைய தினம் ஸ்ரீமங்கலராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு அவரின் நலம் விசாரித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புகொடி போராட்டம் நடத்தப்படவுள்ளமையை அறிந்து கொண்ட ஜனாதிபதி, விகாரைக்கு வருகை தந்ததாக சுமனரத்ன தேரர் ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்
விகாரைக்கு வருகைத்தந்த ஜனாதிபதி 15 நிமிடங்கள் மாத்திரமே அங்கு செலவிட்டுள்ளார் என தேரர் கூறியுள்ளார்.

Thursday, March 1, 2018

Thursday, February 22, 2018

நீங்களும் பணக்கார ராசியைச் சேர்ந்தவரா??

நீங்களும் பணக்கார ராசியைச் சேர்ந்தவரா??
இவ்வுலகில் யாருக்கு தான் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்காது. நிச்சயம் அனைவருக்குமே இருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு தான் பணத்தை வைத்திருந்தாலும், இன்னும் அதிகமாக சம்பாதிக்கவே விரும்புவர். கடின உழைப்பும், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதும் ஒருவரை சிறந்த வழியில் பணத்தை ஈட்டச் செய்யும். அதே சமயம் ஒருவரது ராசிக்கும், செல்வத்தை ஈட்டுவதற்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரியுமா?
ஆம், சிலர் கடுமையாக உழைக்கமாட்டார்கள். ஆனால் சிறிது முயற்சித்தாலே பணக்காரர் ஆகிவிடுவர். ஆனால் வேறு சில எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்நிலையை அடைய முடியாமல் இருப்பர். இவை அனைத்திற்கும் ஒருவரது ராசியும் ஓர் காரணம் என ஜோதிடம் கூறுகிறது.
உங்களுக்கு எந்த ராசிக்கார்களுக்கு பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட மக்கள் மற்றவர்களை விட மிகவும் விரைவில் பணத்தை சம்பாதிப்பார்கள். இங்கு அப்படி விரைவில் பணத்தை சம்பாதிக்கும் சில ராசிக்காரர்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் அந்த ராசிக்கார்களுள் ஒருவராக இருக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கார்கள் பிடிவாத தன்மைக் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் பொறுமைசாலி மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்கள் எதிலும் அதிக கவனத்தை செலுத்துவார்கள் மற்றும் மற்றவர்களால் முடியாத காரியத்தைக் கூட இவர்களால் முடிக்க முடியும். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் தங்களது உழைப்பால் தான் பணத்தை ஈட்ட விரும்புவார்கள். இவர்கள் தேவையில்லாத செலவுகளை செய்பவர்களாக இருப்பர். ஏனெனில் இவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவார்கள்.
மேலும் இவர்கள் இயற்கையாகவே தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு எப்போதும் ஸ்பெஷலான பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்துவார்கள். என்ன தான் தேவையில்லாத செலவுகளை செய்பவராக இருந்தாலும், இந்த ராசிக்காரர்களிடம் சேமிப்பு எப்போதுமே இருக்கும். இந்த ஒரு பழக்கமே இவர்களை செல்வந்தராக்குகிறது என்பதை மறக்காதீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் மீது மிகவும் அன்பானவர்கள் மற்றும் அக்கறை கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடிய அளவு தாராள மனப்பான்மை கொண்டவர்கள். குடும்பத்திற்கு அடுத்தப்படியாக இவர்களது முன்னுரிமை நிதி பாதுகாப்பு ஆகும். இவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதில் சிறந்தவர்கள்.
மேலும் இவர்கள் எப்போதும் தங்களது நிதி நிலைமை மற்றும் முடிவெடுக்கும் போது மற்றவர்களுடன் கலந்தாலோசிக்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது நிதி பாதுகாப்பிற்காக இளமையிலேயே சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் வீணாக எந்த ஒரு செலவையும் செய்யமாட்டார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே பணத்தை தாராளமாக செலவழிப்பார்கள்.

சிம்மம்
நிதி அம்சத்தைக் கொண்ட ராசிக்காரர்களுள் சிறப்பானவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது நிதியுதவி முழுவதையும் நிர்வகிக்க ஒரு வினோதமான திறனைக் கொண்டுள்ளனர். இவர்கள் எப்போதும் சிறப்பான தீர்ப்பை வழங்குபவர்களாக இருப்பர் மற்றும் இவர்களது சேமிப்பு, செலவு மற்றும் பேரம் பேசுதல் போன்ற அனைத்துமே சிறப்பானதாக இருக்கும்.
மேலும் இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள் மற்றும் எதிலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தைரியமானவர்கள். எனவே இவர்கள் ரிஸ்க் எடுக்க எப்போதும் அஞ்சமாட்டார்கள். இவர்களது கற்பனைவளம் மற்றும் இலட்சிய இயல்பு, இவர்களை ஒரு நல்ல தலைவராக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சிறந்த மேலாளர்கள். இவர்கள் தங்களது நிதி நிலைமையை சிறப்பாக நிர்வகிப்பார்கள். இவர்களது அமைதியான குணத்தால், எந்த ஒரு சிக்கலான சூழ்நிலைகளிலும் நல்ல தீர்வைக் காண்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் கொடுக்கல்-வாங்கல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதால், இவர்கள் மிகச்சிறந்த தீர்மானங்களை எடுப்பவர்களாக இருப்பர்.
மேலும் இவர்கள் மிகவும் சிக்கனக்காரர்கள். இதனால் இவர்கள் நிதியை சிறப்பாக சேமிப்பவர்களாக இருப்பர். ஆனால் இவர்களுக்கு உணவு என்றால் கொள்ளைப் பிரியம். எனவே இவர்கள் மற்றவர்களுக்கு விருந்து அளிக்க செலவு செய்ய யோசிக்கமாட்டார்கள். முக்கியமாக கன்னி ராசிக்காரர்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பானதாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பர். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் பணம் பணம் என்று இருப்பர். ஆனால் இவர்களிடம் சேமிப்பு என்பது இருக்காது. இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்கு போடும் திட்டங்களால், அதிகம் சம்பாதிக்க முடியும்.
மேலும் இவர்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் எடுக்கும் முடிவு எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களது பேரார்வம் மற்றும் போட்டியால் தான், இவர்கள் இருக்கும் துறைகளில் வெற்றியை எட்டுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மஞ்சள் நிற ஜஸ்பர் கல் சிறந்த அதிர்ஷ்டத்தை வழங்கும்.

Tuesday, February 20, 2018

சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் - லொள்ளுசபா மனோகர் அதிரடி

சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் - லொள்ளுசபா மனோகர் அதிரடி
சினிமாவில் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகிறது.
அந்தவகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மனோகரும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சினிமாவுல இருக்கிறவங்களையே மதிக்காத ரஜினி அரசியலுக்கு வந்து ஓட்டுப்போட்ட மக்களை எங்க கண்டுகொள்ள போகிறார் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீது சுவிஸ் வழக்கறிஞர்கள் கடுமையான நிலைப்பாடு

விடுதலைப் புலிகள் மீது சுவிஸ் வழக்கறிஞர்கள் கடுமையான நிலைப்பாடு
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் இயக்கமானது குற்றவாளிகளின் இயக்கமென்று சுவிட்சர்லாந்தின் முதன்மை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் குறித்த கருத்தை வழக்கறிஞர் Juliette Noto தெரிவித்துள்ளார்.
குற்றப்பின்னணி கொண்ட ஒரு அமைப்புக்கு இருக்க வேண்டிய அனைத்தும் அம்சங்களும் விடுதலைப் புலிகள் அமைக்கும் இருப்பதாக அவர் கருதுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சட்டத்திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வந்ததாக கூறும் Juliette Noto,
அந்த இயக்கத்தின் உண்மையான நோக்கத்தை குற்றவியல் நடவடிக்கைகளால் எதிர்கொண்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இருக்கும் அதே பார்வையை தாம் சுவிட்சர்லாந்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பொருத்திப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் அவர்களது செயல்பாடுகளில் மிகவும் ஈடுபாட்டுடன் இயங்குவதாகவும்,
ஆனால் அந்த இயக்கத்தை ஆதரிப்பவர்கள் அதன் கருத்தியலில் முழு ஈடுபாட்டுடன் இயங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போர் நிறுத்த காலகட்டங்களில், குறிப்பாக 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் 2005 வரை விடுதலைப்புலிகள் இயக்கமானது தங்கள் அரசியல் எதிரிகளை படுகொலை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, திருகோணமலை பகுதியில் இஸ்லாமிய இனத்தை நிர்மூலம் செய்ததையும், அதே காலகட்டத்தில் 2 அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் Noto சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த வழக்கறிஞர் Noto,
பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் இயக்கமே கலவரத்தையும் போரையும் ஊக்குவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனிவா ஒப்பந்தத்தை ஒருக்காலும் மதிக்காத விடுதலிப்புலிகள் இயக்கம் எப்போதுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளது என்றார்.
தற்போது வழக்கை எதிர்கொள்ளும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 13 பேரும், விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர்கள்.
ஆதலால், உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு சுவிட்சர்லாந்தில் சேகரித்த நிதி மொத்தமும் விடுதலைப்புலிகள் அமைப்புக்காகவே என வழக்கறிஞர் Juliette Noto திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி http://m.20min.ch

Monday, February 19, 2018

கனேடிய பிரதமருக்கு இந்தியாவில் நேர்ந்த அவமானம்!

கனேடிய பிரதமருக்கு இந்தியாவில் நேர்ந்த அவமானம்!
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் அவ்வளவு ஒன்றும் உவப்பானதாக இல்லை
.
தாஜ் மஹால் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது குடும்பத்தினர் சென்றபோது இந்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலராலும் அவர் புறக்கணிப்புக்கு உள்ளானார்.

அவர் டெல்லி வந்து சேர்ந்தபோது கீழ்நிலையில் உள்ள அமைச்சரான வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றது அவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதி பல தருணங்களில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சென்று வரவேற்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். தனது வெளிநாட்டு சகாக்களை அவர் கட்டியணைத்து வரவேற்கவும் செய்வார்.

மிகச் சமீபமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் நேரில் சென்று, விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார்.

ஆனால், கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து இரண்டு நாட்கள் ஆகியும் மோதி அவரை இன்னும் நேரில் சந்திக்கக் கூட இல்லை. திங்களன்று பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரூடோ சென்றபோது, அங்கும் பிரதமர் மோதி செல்லவில்லை.

பிரதமர் மட்டுமல்ல, ஞாயிறன்று ட்ரூடோ தாஜ் மஹால் சென்றபோது, அந்த உலகப் பாரம்பரிய சின்னம் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவரைச் சந்திக்கவில்லை.

ஒரு கீழ்நிலையுள்ள அமைச்சரை ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்க அனுப்பிவைத்தது நிச்சயமாக அவரை அவமதிக்கும் செயல் என்று பிபிசியிடம் கூறினார் பொருளாதார வல்லுனரும், பத்தி எழுத்தாளருமான விவேக் தெஹேஜியா.

"இந்திய மாநிலமான பஞ்சாபை தனியாகப் பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடு அமைக்கக் கோரும் காலிஸ்தான் இயக்கத்துடன் ட்ரூடோவின் அரசில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்புடன் இருப்பதே காரணம்,"என்று அவர் கூறுகிறார்.

கனடாவில் வாழும் சீக்கியர்கள் ட்ரூடோவின் தாராளவாதக் கட்சிக்கு பெரும் வாக்கு வங்கியாக உள்ளனர். சில அமைச்சர்கள் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடம் நெருக்கமானவர்களாக உள்ளனர்.

கடந்த 1985இல் 329 பேர் கொல்லப்பட்ட கனடாவில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனட அதிகாரிகள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு சீக்கியர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

'காலிஸ்தான் ஆதரவாளர்' என்று காரணம் கூறி, ஏப்ரல் 2016-இல் இந்தியா வந்த கனடா பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன்-ஐ பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் சந்திக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா பிரதமர் இந்தியா வந்தபோது அவமானப்படுத்தப்படவில்லை என்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் கனடாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

"மத்திய அமைச்சரவையின் ஓர் உறுப்பினர் அவரை வரவேற்க வேண்டும் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு தலைவர்களை மோதி நேரில் சென்று வரவேற்றார் என்பதற்காக எல்லோரையும் அவ்வாறே வரவேற்க முடியாது," என்கிறார் அவர்.

"காலிஸ்தான் குறித்த இந்தியாவின் கவலைகளை கனடாவின் உயர் நிலையில் இருப்பவர்களிடம் எழுப்பாமல், ட்ரூடோவின் வருகையை, காலிஸ்தான் குறித்த கனடாவின் நிலைப்பாடு குறித்து முன்முடிவுடன் அணுகக்கூடாது," என்று பிபிசியிடம் தெரிவித்தார் முன்னாள் வெளியுறவு அதிகாரி கன்வல் சிபல்.

"உள்நாட்டு அரசியல் காரணங்களால் காலிஸ்தான் பிரிவினைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை. எனினும், ட்ரூடோவின் இந்தப் பயணத்தை கனடா செயல்படுவதற்கான உத்தரவாதம் பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்றார் அவர்.
ஜஸ்டின் ட்ரூடோ அவமானப்படுத்தப்படவில்லை என்று கருதும் சிபல் சமீபத்தில் இரு நாட்டு உறவுகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறுகிறார்.
இந்தியாவுக்கு அணுமின் உற்பத்திக்காக யுரேனியம் அளிக்க 2015இல் கனடா உடன்படிக்கை செய்துகொண்டது இருநாட்டு உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாகக் கருதப்பட்டது.

கீழ்நிலை அமைச்சர் ஒருவர் வரவேற்க அனுப்பப்பட்டது பெரிதுபடுத்தப்படுவதாகக் கூறும் சிபல், "ஓர் அரசுமுறைப் பயணத்தை சீர்குலைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இருநாட்டு நலன் கருதி அதை வெற்றியடையச் செய்யவே விரும்புவார்கள்," என்கிறார் அவர்.
- BBC - Tamil